28. திருஞானசம்பந்தர் பெருமான்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 28
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : பாரிசாதம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சீர்காழி
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - மூலம்
வரலாறு : சோழ நாட்டில் சீகாழி என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருமகனாக வேத நெறி தழைத்தோங்க திருஅவதாரம் செய்தார் பிள்ளையார் என்னும் இயற்பெயர் கொண்ட சம்பந்தர் பெருமான். ஒரு நாள் தோணிபுரத்துக் கோயிலுக்கு தந்தையாருடன் சென்ற பிள்ளையார் குளத்தில் நீராட இறங்கிய தந்தையாரை நீண்ட நேரம் காணாததால் அழுது அரற்ற பார்வதி தேவி பொற்கிண்ணத்தில் பாலடிசில் கொடுத்தார். நிகழ்ந்தவற்றை தந்தையார் வினவ தோடுடைய செவியன் என்று தொடங்கி பாடுகிறார். அதுமுதல் அவர் திருஞானசம்பந்தர் என அழைக்கப்பட்டார். திருக்கோலக்காவில் இறைவன் பொற்றாளமும் இறைவி அதற்கு ஓசையும் கொடுத்தனர். திருநெல்வாயில் அரத்துறையில் முத்துச் சிவிகையும் சின்னமும் கொடுத்தார். திருப்பட்டீஸ்வரத்தில் முத்துப் பந்தர் கொடுத்தார். சம்பந்தர் பெருமான் திருமருகலில் அரவம் தீண்டி இறந்த வணிகனைப் பதிகம் பாடி எழுப்பினார். பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் திருநீற்றுப்பதிகம் பாடி குணமாக்கினார். திருமயிலையில் எலும்பைப் பெண்ணாக்கினார். சமணர்களை வாதில் வென்றார். நல்லூர்ப்பெருமணம் என்ற தலத்தில் தந்தையாரின் வேண்டுகோளுக்கிணங்க தோத்திரப்பூர்ணாம்பிகை என்னும் நங்கையைத் திருமணம் செய்துகொள்கிறார். அத்திருமணத்திலேயே மனைவியுடனும் திருமணத்திற்கு வந்திருந்த அடியார்களுடனும் அங்கு எழுந்த சோதியில் புகுந்து இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி – 609110 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04364-270235

இருப்பிட வரைபடம்


வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைகொண்டு திருத்தொண்டு பரவுவாம் 

- பெ.பு. 1904
பாடல் கேளுங்கள்
 வேதநெறி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க